Monday, 5 September 2011

உங்களது சங்கத்தினை குறித்து அறிந்திடுங்கள்:

  1. லியாபி முகவர்கள் சங்கம் அக்டோபர் 2, 1964 அன்று மும்பையில் துவங்கப் பட்டது. 
  2.  ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 2ம் தேதியன்று ஒவ்வொரு முகவருக்கும் லியாபி தினமாகும்.
  3.  ஜனவரி 24, 1945 அன்று அனைத்து இந்திய முகவர்களும் கல்கத்தாவில் லேட். திரு.எஸ்.எஸ். அலி அவர்கள் தலைமையில் அனைத்து முகவர்களின் உரிமைகளை காப்பாற்ற ஒன்று கூடினர். எனவே ஜனவரி 24ம் தேதி தொழில் முறை முகவர் உரிமை தினமாக கடைபிடிக்கப் படுகிறது.
  4. பல்வேறு பார்லிமெண்ட் குழுக்களின் முன் முகவர்களின் சமுதாயத்திற்காக லியாபி பங்கேற்று கொண்டுள்ளது.
  5. லியாபி முகவர்களின் நன்னடத்தை சட்டம் 1972 முதன் முறையாக அறிமுகப் படுத்தியுள்ளது.  இவ்வகை விதிமுறைகள் உலகத்திலேயே முதல் முறையாகும்.
  6. எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவனத்தை தொடர்ந்து வலியுறுத்தி லியாபி, முகவர் மன்றங்களை கொண்டுவர செய்தது.  இதன் மூலம் தொடர்ச்சியாக நல்ல வணிகம் செய்யும் முகவர்களின் கவுரவத்தை உயர்த்திப் பிடித்துள்ளது.
  7. லியாபி சங்கம் பல போராட்டங்களுக்குப் பிறகு கவுரவ மிக்க கேரியர் ஏஜென்சி சிஸ்டத்தினை எல்.ஐ.சி. நிறுவனத்தை அறிமுகப் படுத்த வைத்தது.
  8. லியாபி சங்கம் பல ஆயுள் காப்பீட்டு படிப்பகங்கள் ஏற்பட ஒரு கருவியாக இருந்தது.
  9. லியாபி சங்கம் எல்.ஐ.சி நிறுவனத்தை வலியுறுத்தி, ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முகவர்கள் சந்திப்பை ஏற்படுத்தியது (consultative process with agents icc meetings). அது தற்போது கருத்துகளை பறிமாறிக் கொள்ளும் சந்திப்பாக பல அடுக்குகளில் நடைபெற்று வருகிறது.
  10. லியாபி சங்கம் பணி நிறைவுக் கொடை (gratuity) தொகையினை ரூ. 1,00,000த்திலிருந்து ரூ. 2,00,000மாக உயர்த்த வைத்துள்ளது.
  11. லியாபி சங்கம் குழு காப்பீட்டினை அனைத்து முகவர்களுக்கும் விபத்துக் காப்பீட்ரூ. 5,00,000 வரை டினையும் சேர்த்து அறிமுகப் படுத்தியது.
  12. அனைத்து முகவர்களுக்கும் குழுக் காப்பீட்டினை அளிப்பதற்கு முயற்சி எடுத்து முகவர்கள் அவர்கள் சார்ந்துள்ள சங்கங்கள் மூலமாக காப்பீடு அளித்துள்ளது.
  13. முகவர் மன்ற முகவர்களுக்கு மெடிக்ளைம் பாலிசியினையும், மற்ற கேரியர் ஏஜெண்டுகளுக்கு ஊக்கத் தொகை (stipend) ரூ. 750லிருந்து ரூ.2500க்கு உயர்த்தி கொடுக்கவும் செய்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது.
  14. குழு கடன் (வண்டி கடன்) திரும்பவும் (2வது மற்றும் 3வது முறை) வாங்கும் வசதியினை 01.10.2005 முதல் அறிமுகத்தியதில் வெற்றி பெற்றது.
  15. சேமிப்புடன் கூடிய குழு காப்பீடு வசதி குறித்த நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தை கடைசி கட்டத்தில் உள்ளது.
  16. தொடர் முயற்சியினால் லியாபி சங்கம் நிறுவனர் மன்ற உறுப்பினர்களுக்கான முகவர்களின் பட்டமளிப்பிற்கு முந்தைய பயிற்சி பட்டறையை தொடரவும், அதற்கு மாற்றாக ஊக்கமளித்தல், உடல்நிலை குறித்த அறிவு மற்றும் மன அழுத்தத்தை சமாளித்து சீராக வைத்துக் கொள்ளுதல் ஆகியனவும் அறிந்து கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
  17. பண்டிகை கால அட்வான்ஸ் தொகையினை ரூ. 7000 முதல் ரூ. 11500ஆக உயர்த்துவதில் வெற்றி பெற்றுள்ளது.
  18. லியாபி சங்கம் பாலிசிதாரர்களுக்கான பாலிசி கடன்களுக்கான முத்திரை  தீர்வை குறைப்பதில் உறுதியுடன் போராடி வெற்றி கண்டுள்ளது.  மேலும் நமது சங்கம் தொடர்ந்து முதிர்வு கால ஒரு முறை கொடுக்கும் போனஸ் தொகை குறைப்பினை குறிந்து தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.  மற்றும் சில பிரச்னைகளான காலம் தாழ்த்தி செலுத்தும் ப்ரீமியத் தொகைக்கான அபராத வட்டியினை குறைப்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறது.
  19. வாழ்வுகால பலன்கள் (survival benefits for money back policies), முதிர்வு கால பலன்கள், இறப்பு பலனகளை உரிய காலத்தில் பாலிசிதாரர்களுக்கு சேர்வதற்கான முயற்சியில் லியாபி சங்கம் சாதனை புரிந்துள்ளது.
  20. இடைவிடாத தொடர் முயற்சியினால் முகவர்கள் பாலிசிதாரர்களுக்காக செலுத்தும் மெடிக்கல் பரிசோதனை செலவுகளை முகவர்களுக்கே கொடுப்பதில் வெற்றி பெற்றுள்ளது.
  21. கூடுதல் அலுவலக அலவன்களை கூட்டிக் கொடுப்பதிலும், பில்கள் மற்றும் வவுச்சர்கள் இல்லாமல் அலுவலக அலவன்ஸ் பெறுவதிலும் லியாபியின் தொடர் போராட்டங்கள் வெற்றி கண்டுள்ளது. மேலும், நினைவு பரிசுக்கான தொகையையும் கூடியுள்ளது.  லியாபி சங்கத்தின் இடைவிடாத முயற்சியினால் “சம்வர்த்தன்என்ற பென்ஷன் திட்டம் முகவர்களுக்காக கடந்த ஆண்டு அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.  இது குறித்த முழு திருப்தி லியாபி சங்கத்திற்கு இல்லை என்றாலும், இப்பென்ஷன் திட்டம் துவங்கப் பட்டதில் மகிழ்ச்சியே.  மற்றும் சங்கம் இடைவிடாது இத்திட்டத்தை மேம்படுத்த முயற்சி எடுத்துக் கொள்ளும்.
  22. நாடு முழுவதும் எல்.ஐ.சி. முகவர்கள் முழு நேர தொழில் முகவர்களாக உருவாக லியாபி சங்கம் அர்ப்பணிப்பு உணர்வுடன் முழு முயற்சியும், ஒவ்வொரு அடியினையும் எடுத்து வைக்கிறது.
  23. முகவர் தொழிலில் முழு மனதுடன் லியாபி சங்கம் முகவர் சமுதாயத்திற்காக, அவர்களின் பலாபலன்களுக்காவும், பாலிசிதாரரின் நலன்களுக்காகவும் மற்ற வெளிநாடுகளில் உள்ளது போன்றே நடக்க எப்பொழுதும் கைகொடுக்கிறது. மேலும், பண நலன், உடல் நலன், கௌரவம் ஆகியவை முகவர்களுக்கான முக்கிய தேவை.  இவை கிட்ட லியாபி சங்கம் முழு நேரமும், பாடுபடும் என்றும் உறுதியளிக்கிறது.

No comments:

Post a Comment