Sunday, 11 September 2011

எளிதெனப்படுவது

எளிது : மற்றவர்களிடம் குறை காண்பதென்பது எளிது
கடினம் : தன்னிடமுள்ள குறைகளை உணர்வது கடினம்
எளிது : ஆத்திரத்தில் வார்த்தைகளை விடுவது எளிது
கடினம் : ஆத்திரத்திலும் நாவை அடக்குவது கடினம்
எளிது : மற்றவர்களை காயப்படுத்துவது எளிது
கடினம் : காயத்துக்கு மருந்திடுவது கடினம்
எளிது : மற்றவர்களின் தவறை மன்னிப்பது எளிது
கடினம் : மற்றவர்களிடம் மன்னிப்பு வேண்டுவது கடினம்
எளிது : விதிகளை ஏற்படுத்துவது எளிது
கடினம் : விதிகளைப் பின்பற்றுவது கடினம்
எளிது : வெற்றியைக் கொண்டாடுவது எளிது
கடினம் : பெருந்தன்மையுடன் தோல்வியை ஏற்பது கடினம்
எளிது : முழு நிலவை ரசிப்பது எளிது
கடினம் : அமாவாசையை ரசிப்பது கடினம்
எளிது : கால் தவறி விழுவது எளிது
கடினம் : விழுந்த பின் எழுவது கடினம்
எளிது : ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக வாழ்வது எளிது
கடினம் : உண்மையான மகிழ்ச்சியை உணர்ந்து வாழ்வது கடினம்
எளிது : வாக்குறுதிகள் அளிப்பது எளிது
கடினம் : கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம்
எளிது : தவறுவது எளிது
கடினம் : தவறுகளிலிருந்து பயில்வது கடினம்
எளிது : இழந்த காதலுக்காக அழுவது எளிது
கடினம் : காதலை இழக்காமல் பாதுகாப்பது கடினம்
எளிது : முன்னேற்றத்திற்கான வழிகளை யோசிப்பது எளிது
கடினம் : யோசனைகளை செயல்படுத்துவது கடினம்
எளிது : மற்றவர்களைப் பற்றி தவறாக எண்ணுவது எளிது
கடினம் : சந்தேகத்தின் பலனை மற்றவர்களுக்கு அளிப்பது கடினம்
எளிது : மற்றவர்களிடமிருந்து பெறுவது எளிது
கடினம் : மற்றவர்களுக்குக் கொடுப்பது கடினம்
எளிது : நட்புடன் இருப்பது எளிது
கடினம் : நட்பை இழந்துவிடாமல் பாதுகாப்பது கடினம்

No comments:

Post a Comment