Tuesday 25 June 2013

சிந்தனைத் துளிகளில் சில

சிந்தனைத் துளிகளில் சில

செல்வத்தை வைத்துச் சென்றதகப்பனை விடத் தொழில் கற்ப்பித்துச் சென்ற தகப்பனே தன் மக்களூக்கு மிகுந்த பாதுகாப்பு அளித்தவன்.

 

உழைத்து சம்பாதித்த பொருளுக்கு எப்போதுமே மதிப்பு மிகுதி.

அமைதி இல்லாத இடத்தில் இன்பம் இருக்கமுடியாது.
மூன்று முறை முகத்தில் அடித்தால்புத்தருக்கும் கோபம் வந்தே தீரும்.

முடிந்த வழிகளில் எல்லாம் நன்மை செய்!முடிந்த வகைகளில் எல்லாம் நன்மை செய்!முடிந்த இடங்களில் எல்லாம் நன்மை செய்!முடிந்த மனிதருக்கு எல்லாம் நன்மை செய்!உனக்கு எல்லா வழிகளிலும் நன்மை வந்து சேரும்!.

பிறரை பாரட்டுங்கள்  - பாரட்டு கிடைக்கும்பிறரை  மதியுங்கள்    - மதிப்பு கிடைக்கும்பிறருக்கு அன்பு செலுத்துங்கள் - அன்பு தேடி வரும்இவை ஒரு வழிப்பாதைகள் அல்ல இரு வழி பாதைகள்
அன்பினில் வணிகத்திற்க்கு இடமில்லை.வணிகத்தில் அன்பிற்க்கு  இடமில்லை.
நன்றி

கஷ்ட காலங்களில் கடவுள்

கஷ்ட காலங்களில் கடவுள்

ஒரு மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான். அது அவன் வாழ்க்கைப் பயணம்.

நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால்தடங்கள். அவனுக்கு ஆச்சரியம். சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை.

சத்தமாகக் கேட்டான். "என்னுடன் வருவது யார்?"

"நான் கடவுள்" என்று அசரீரியாகப் பதில் வந்தது.

அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. 'கடவுள் என்னுடன் பயணம் செய்து வருகிறார்'.

பயணம் தொடர்ந்தது. அவன் அந்தக் கால் தடங்களைக் கவனிப்பதை நாளாவட்டத்தில் மறந்தான். சுகமாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தன. சிறிய பிரச்சினைகள் பெரிதாயின. துன்பமும் துக்கமும் அதிகமாயின.

ஒரு கட்டத்தில் அவன் சமாளிக்க முடியாமல் தவித்த போது தான் அந்தக் கால் தடங்கள் நினைவு மறுபடி வந்தது. 'கூட கடவுள் இருக்கும் போதே இவ்வளவு துன்பமா' என்று தனக்குள் கேட்டுக் கொண்டவன் கால்தடங்களைக் கவனித்தான். அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பாதையில் ஒரே ஒரு ஜோடி கால் தடங்கள் மட்டுமே தெரிந்தன.

அவன் சற்றி பின்னோக்கிப் பார்த்தான். அவன் கஷ்டகாலம் ஆரம்பித்த கணத்திலிருந்து ஒரே ஒரு ஜோடிக் கால் தடம் மட்டுமே தெரிந்தது. அவனுக்கு அழுகையாய் வந்தது. கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளை அழுகையினூடே கேட்டான். "கடவுளே என் இன்ப காலத்தில் உடன் வந்து கொண்டிருந்தீர்கள், துன்ப காலத்தில் என்னைக் கைவிட்டுக் காணாமல் போய் விட்டீர்களே இது நியாயமா?"

கடவுளிடமிருந்து பதில் வந்தது. "மகனே, நான் உன்னைக் கைவிடவில்லை. உன் துன்பகாலத்தில் நீ பார்த்த காலடிச்சுவடுகள் உன்னுடையவை அல்ல. என்னுடையவை. இந்தக் கடின யாத்திரையில் நடக்க முடியாத உன்னைத் தூக்கிக் கொண்டு நான் தான் நிறைய தூரம் வந்துள்ளேன். அதனால் தான் நீ உன்னுடைய காலடிசுவடுகளைக் காணமுடியவில்லை...."

அந்த மனிதன் கண்களில் நன்றியுடன் வழிந்த கண்ணீர் நிற்க நிறைய நேரம் ஆயிற்று.

குற்றம் காண்பதில் மனிதன் சமர்த்தன். அவனுக்கு அதற்கு நிறைய நேரம் தேவைப்படுவதில்லை. கஷ்ட காலங்களில் உறவும் நட்பும் காணாமல் போவது போல கடவுளின் அருளும் காணாமல் போவதாக அவன் என்ணுவதில் வியப்பில்லை. சுமைகள் கூடும் போது, இறக்கி வைக்க வழி தெரியாத போது இருக்கவே இருக்கிறார் கடவுள், அவனிடம் வசவுகள் வாங்கிக் கொள்ள.

வந்த கஷ்டங்கள் நமக்குத் தெரியும். எத்தனையோ கஷ்டங்கள் வரவிருந்து, அவை இறையருளால் வராமல் தவிர்க்கப்பட்டிருக்கலாம். அவை நம் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகிறது. கடவுள் கணக்கு சொல்வதில்லை. எனவே எத்தனையோ உண்மைகள் நமக்குத் தெரியாமலேயே போய் விடுகின்றன.

துன்பங்களும், சோதனைக் காலங்களும் வரும் போது நாம் ஒரு பெரிய உண்மையை மறந்து விடக்கூடாது. எதுவுமே காரணம் இல்லாமல் நம்மிடம் வருவதில்லை. அவற்றில் சில நாம் சம்பாதித்தவை. நம் முந்தைய செயல்களின் விளைவுகள். நாமே வரவழைத்தவற்றை நாம் சந்தித்தே ஆக வேண்டியுள்ளது. மறுப்பதும் எதிர்ப்பதும் நியாயமல்ல. மற்றவை நாம் வளர, பக்குவப்படத் தேவையான அனுபவங்கள். நாம் கற்க வேண்டிய பாடங்கள். அவற்றைக் கற்றறிந்த பின்னரே, அந்த சோதனைத் தீயில் பட்ட பின்னரே நாம் புடம் போட்ட தங்கமாய் மிளிரப் போகிறோம். அவை நம் வாழ்வில் வரா விட்டால் நாம் சோபிப்பதுமில்லை.

கையால் மென்மையாக தடவிக் கொடுத்தே கல்லை சிலையாக முடியாது. இன்பங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தால் நாம் பக்குவமடைவதும் சாத்தியமல்ல. உளிக்கு கல்லின் மீது பகையில்லை. உளியடிகளைத் தாங்காத கல் அழகிய சிலையாவதில்லை.

கடவுள் என்ற சிற்பி நம்மைச் செதுக்கும் போது அழகிய சிலையாகப் போகிறோம் என்ற உணர்வுடன் தாங்கிக் கொண்டால், இது அர்த்தமில்லாததல்ல என்று புரிந்து கொண்டால் அந்த அடிகளும் நமக்கு ஆனந்தமே.

இன்னொரு விதமாகவும் சொல்லலாம். மருந்து கசக்கிறது என்று குழந்தை கதறியழுதால் தாய் விட்டு விட மாட்டாள். குழந்தை குணமாக வேண்டும் என்று அக்கறை அவளுக்கு அதிகமுண்டு. பலவந்தமாக மருந்தை குழந்தை வாயில் திணிக்கையில் குழந்தை தாயை ஒரு கொடுமைக்காரியாகக் கூட நினைக்கலாம். குழந்தை என்ன நினைக்கிறது என்பது தாயிற்கு முக்கியமல்ல. குழந்தை குணமாக வேண்டும் என்பதே தாயிற்கு முக்கியம். குழந்தைக்கு எது நல்லது என்பதை குழந்தையை விடத் தாய் நன்றாக அறிவாள். கடவுளும் அந்தத் தாயைப் போல் தான்.

இனி கஷ்ட காலங்கள் வரும் போது கடவுளை வையாதீர்கள். அவற்றைத் தாங்கும் சக்தியையும் அவற்றிலிருந்து கற்கும் புத்தியையும் மட்டுமே கடவுளிடம் வேண்டுங்கள்.

கஷ்டகாலங்களில் தைரியத்தையும் இழக்காதீர்கள். உங்களுக்கு நடக்க முடியாத போது சுமக்கத் தயாராய் கடவுள் உங்களுடனேயே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும். முடிவு கண்டிப்பாக இனிமையாகும்.
நன்றி


Saturday 1 June 2013

IRDA HAS REDUCED THE PASS MARK %(FOR NEW AGENTS) FROM 50 TO 35 WITH EFFECT FROM 30/05/2013

IRDA HAS REDUCED THE PASS  MARK  %  (FOR NEW AGENTS) FROM 50 TO 35 WITH EFFECT FROM 30/05/2013

In a bid to increase the number of candidates qualifying as an insurance agents, the Insurance Regulatory and Development Authority (IRDA) has reduced the pass percentage to 35% with immediate effect. Earlier, a candidate had to score a minimum of 50 % marks for qualifying in the pre-recruitment agent’s examination.

The IRDA has been receiving representations from various stakeholders expressing the practical difficulties involved in the recruitment of insurance agents.

Among other reasons, the mandated higher benchmark of 50% marks is identified as major reason contributing to reduction in agency force in the country, said a circular from IRDA.

Therefore IRDA said that considering the fact that the agents are under direct supervision of marketing officials of insurers who train them on the job continuously, it has decided to reduce the pass percentage benchmark.

In 2011, IRDA conducted a thorough review of the existing life insurance agent licensing qualification and decided to use the expertise of Chartered Insurance Institute (CII), London, in enhancing the existing IC33 ‘License to practice’ – the qualification for pre-recruitment examination for life insurance agents conducted by the Insurance Institute of India (III).

The syllabus introduced was challenging in its scope and depth. It did not encourage agents to merely memorise facts and figures, but also tested their understanding of learning, and ability to apply it in a wide range of practical real-life situations.

As a result, very few candidates were able to clear agent’s examination leading to significant drop in the number of insurance agents in the industry.

According to IRDA annual report FY’12, the year 2011-12 witnessed 10.63% decrease in the number of individual agents. The number has gone down to 26.39 lakh as on 31 March 2011, to 23.59 lakh as on 31 March 2012. While total number of agents appointed by life insurers was 7.14 lakh, the number of agents terminated was as high as 9.95 lakh.

The scenario was worse for private life insurers compared to Life Insurance Corporation of India (LIC). While private insurers appointed 3.68 lakh agents, 5.89 lakh agents were terminated. On the other hand, in case of LIC, 4.04 lakh agents were terminated, while it appointed 3.45 lakh agents.

Insurers say that agent examination had become more caselet oriented with application of knowledge to ensure that only those who can apply their knowledge are able to clear the exams. Bringing down the minimum pass percentage will ensure that more number of students qualify as agents.