சிக்கல் இல்லாமல் காப்பீட்டுத் தொகையை பெற!! இத படிங்க
பெரும்பாலான மக்கள் காப்பீட்டுக்கான பிரிமீயத்தை ஒரு வருமானம் இல்லா முதலீடாகவே (அதாவது காப்பீடு முதிர்சியின் பொழுது பெரும் நன்மையின் அடிப்படையில்) கருதுகின்றனர்.
எனினும், காப்பீடு மட்டுமே வாழ்வின் நிச்சயமற்ற தன்மைக்கு எதிராக உடனடியாக நிதி உதவி அளிக்கும் மருந்து என பல முறை நீருபிக்கப்பட்டுள்ளது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள எளிய குறிப்புகள், காப்பீடு முதிர்ச்சி அடையும் பொழுதோ அல்லது மரணம் போன்ற அசம்பாவிதங்களின் பொழுதோ காப்பீட்டின் முழுமையைான நன்மையை, காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து எந்த விதமான தொந்தரவும் இல்லாத வகையில் பெறுவதற்கு உங்களுக்கு உதவும். காப்பீடு பாத்தியதை கோரும் விண்ணப்பத்தை இதற்கு முன் சமர்ப்பித்த முன் அனுபவம் உங்களூக்கு இல்லை எனில், பாலிசியை விற்ற முகவரின் உதவியை கேட்டுப் பெறலாம்.
இல்லையெனில் காப்பீட்டு நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அவர்களின் உதவியுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்,
பாத்தியதை கோரும் விண்ணப்பத்தை உரிய காலத்திற்குள் சமர்ப்பிப்பது என்பது மிகவும் முக்கியமானது. அது பாத்தியதை நிராகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.
மரணம் போன்ற அசம்பாவிதங்கள் நேர்ந்து, காப்பீடு பாத்தியதையை கோரி விண்ணப்பித்தால் கீழ் கண்ட அசல் சான்றிதழ்கள் அல்லது சான்றளிக்கப்பட்ட நகல்களை கட்டாயம் இணைக்கவேண்டும்.
* அசல் காப்பீட்டு பத்திரம்
* நகராட்சியால் வழங்கப்பட்ட அசல் மரண சான்றிதழ் அல்லது சான்றிதழின் சான்றழிக்கப்பட்ட நக
. * காப்பீடு செய்திருந்த நபரை இறுதியாக பரிசோதித்த டாக்டரின் சான்றிதழ்.
* பிற மருத்துவர் அல்லது மருத்துவமனைப் பதிவுகள்.
* தகனம் அல்லது சமாதிக்கு பொறுப்பான அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட தகனம் அல்லது சமாதிச் சான்றிதல்
* இயற்கைக்கு மாறான மரணம் எனில் காவல் துறை அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் மரண வழக்கைப் பற்றிய அறிக்கை
* பயனாளியின் அடையாள சான்று.
முறையாக காப்பீடு பிரீமியம் செலுத்தி வந்தால் மட்டுமே காப்புறுதி பாதுகாப்பு கிடைக்கும்.
எனவே, பிரீமியத்தை முறையாகச் செலுத்துவதற்கு உறுதி கொள்ளுங்கள். காப்பீடு பாத்தியதை கோரும் விண்ணப்பத்தில் உண்மையான தகவல்களை மட்டுமே வழங்க வேண்டும்.
தவறான அல்லது தெளிவற்ற தகவல்கள் காப்பீட்டை நிராகரிக்க வழி வகுக்கும்.
காப்பீட்டுடன் ரைடர் பாலிசிக்களான விபத்து அல்லது கடுமையான நோய் போன்றவற்றை எடுத்திருந்தால், பாத்தியதை கோரும் விண்ணப்பத்துடன், மருத்துவ சோதனை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சான்று, மருத்துவ அறிக்கைகள் மற்றும் டிஸ்சார்ஜ் சம்மரிபோன்றவைகளை சமர்ப்பிக்க வேண்டும்
ஆயுள் காப்பீடு நிறுவனம், காப்பீடு பாத்தியதையை ஒரு விசாரணைக்குப் பின்னரே ஒப்புக் கொள்ளும்.
ஆகவே ஆயுள் காப்பீடு நிறுனத்தின் விசாரணைக்கு ஒத்துழைப்பது என்பது மிகவும் இன்றியமையாதது. அது பாத்தியதை சம்பந்தமான முடிவுகளை துரிதப்படுத்தும். காப்பீட்டு அல்லது தீர்வின் அளவு சம்பந்தமாக உங்களூக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் காப்பீடு புகார்களை விசாரிக்கும் ஆணையத்தை அணுகலாம்.
இது அரசாங்கத்தால் வழிநடத்தப்படும் ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பு உங்களுடைய குறைகளை கேட்டறிந்து, உரிய தொகை மிகச் குறுகிய காலத்தில் உங்களுக்கு கிடைக்க வழி வகுக்கும்
ஒரு தொந்தரவு இல்லா காப்பீடு பாத்தியதையைப் பெற கீழ் கண்டவற்றை பின்பற்றுங்கள்.
* பாத்தியதை கோரும் நடைமுறைகளை முழுமையாக தெரிந்து கொள்ளுதல்.
* வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் பாத்தியதை கோரும் விண்ணப்பத்தை சமர்ப்பித்தல்
* எந்தவிதமான நிலுவை பிரிமீயங்களும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
* உண்மையான அனைத்து தகவல்களை வழங்குதல்
* தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக் வேண்டும். * ஆயுள் காப்பீடு நிறுவனத்துடன் ஒத்துழைப்பு.

No comments:
Post a Comment