Monday 3 November 2014

இந்திய ஆயுள் காப்பீட்டு முகவர்களின் பாதைகளும், வரலாறும் மற்றும் மாறிவரும் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்களும், பிரச்னைகளும்




இந்திய ஆயுள் காப்பீட்டு முகவர்களின் பாதைகளும், வரலாறும் மற்றும் மாறிவரும் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்களும், பிரச்னைகளும்

லைப் இன்சூரன்ஸ் ஏஜெண்ட் பெடரேஷன் ஆப் இந்தியா எனப்படும் லியாபி(LIAFI) என்கிற சங்கம் தோன்றி வளர்ந்த கதையினை நான் ஒரு முறை திரும்பி பார்க்க விரும்புகிறேன்.  எத்தனை காலம், எத்தனை பிரச்சினைகள், இதையெல்லாம்  தீர்த்து அல்லது எதிர்கொண்டு வளர்ந்து வருகின்ற ஒரு சங்கம் இதன் மூலம் தன் சக்தியினை பெருக்கி கொண்டது. பாலிசிதார்கள்  மற்றும் முகவர்கள் சமுதாயத்தின் நீண்டகால பாதுகாப்பினையும், நலனையும் மற்றுமே தனது பாதையின் எல்லையாக கொண்டு செயல்படுகின்றது.
ஆயுள் காப்பீட்டின் வரலாற்றை பற்றி ஒரு முகவருக்கு முழுமையாக  தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் மற்றும் விற்பனை கலை அறிந்திருப்பதுதான் ஒரு முகவருக்கான அடிப்படை.  ஒரு மருத்துவ நிபுணர் மனிதரின் நோய் மற்றும் அதன் பின்விளைவுகள் இருக்கும் வரை சமுதாயத்தில் தனக்கு நிச்சயமான ஒரு இடம் உண்டு என்பதை அறிவார். அது போலவே வக்கீல், ஆசிரியர், கணக்காயர், பொறியாளர் அவர்களின் மதிப்பையும், தொழிலின் தன்மை மற்றும் அவருக்கான இடம் எது என்பது குறித்தும் அவர்கள் நன்கு அறிவர். ஆனால் ஒரு காப்பீட்டு முகவர், குறிப்பாக ஆயுள் காப்பீட்டு முகவர் இது போல் சமுதாயத்தில் தனக்கான ஒரு இடத்தை, வருமானத்திற்காக மட்டுமல்ல, ஒரு நிரந்தர கட்டாயத் தேவை என பெருமையாக சொல்ல முடியுமா?  நூற்றாண்டு காலமாக நசுக்கப் பட்ட, ஒரு கீழ்ப்பட்ட ஒரு நிலையிலேயே முகவர் சமுதாயம் என்பது இருந்து வருகின்றது.  முகவர்கள் தனது வரலாறு, தங்களது பங்கு, சமுதாயத்தில் தங்களுக்கான இடம் எது மற்றும் முன்பு எத்தனை முக்கியமான பொறுப்பினை தாங்கள் ஏற்று கொண்டிருக்கிறோம், வருங்காலத்தில் தங்களுடைய வேலை எது என்பதை அறிந்து கொண்டாலே, நாம் நமது நாட்டையும், நம்து முகவர் சமுதாயத்தின் மீதும் நம்பிக்கை கொண்டு விடுவோம். இது நமக்கு ஊக்கத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கும், அதன் மூலம் முகவரின் வளர்ச்சியும், முன்னேற்றமும் இன்றும் சாத்தியமாகும்.
      
இந்தியாவில் முகவர் சங்கத்தின் பங்கு:
       ஆயுள் காப்பீட்டு சட்டம் 1938 வருவதற்கு முன்பு ஆக்கபூர்வமான முகவர் சங்கம் இருந்ததற்கான எந்த வித பதிவுகளும் இல்லை.  ஆனால் இச்சட்டம் குறித்து விவாதம் நடைபெற்றபோது முகவர்களின் கருத்துகளை பதிவு செய்த ஒரு குழு உறுப்பினர்களிடம் ஒரு மேற்கோளை சட்ட அமைச்சர் சுட்டிகாட்டியுள்ளார். ஆனால் அக்குழுவில் இருந்தவர்கள் மத்திய சட்ட குழுவினரே. அவர்கள் முகவர்கள் நலனுக்கு ஆதரவாகவும், எதிராகவுமே பேசியுள்ளனர்.
       முகவர்களுக்கான உரிமம் குறித்த சட்ட வரைவு குறித்து விவாதிக்கும் போது பல்வேறு ஆட்சேபனைகள் கிளப்பப்பட்டது.  காங்கிரஸ் உறுப்பினர்கள் இவ்வரைவுக்கு ஆதரவாக பேசினாலும் வெளிப்படையாக தங்களின் ஆதரவை கூறவில்லை. ஏனெனில் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களில் சிலரும் தங்கள் வாழ்வாதரத்திற்காக ஆயுள் காப்பீட்டினை விற்பனை செய்து வந்தனர்.  அவர்களில் சிலருக்கு பிரிட்டிஷ் சர்காரின் காவல்நிலையத்தில் மோசமான பதிவு இருந்தது. அதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவர்களின் அடிமட்ட தொண்டன் பாதிப்படையும் வகையில் எந்த கட்டாய நிபந்தயையும் முன்வைக்கவில்லை. அவர்களுக்கு காப்பீட்டு முகவர் உரிமம் வாங்க கல்வி தகுதி சான்றிதழைக் கூட கேட்கவில்லை, அது அவர்களை பற்றிய உண்மையை தெரிவித்து விடும் மற்றும் பிரிட்டிஷார் சட்டப்படி அது உரிமத்தை வாங்குவதை கடினமாக்கி விடும்.
       ஆகையால் ஆயுள் காப்பீட்டுச் சட்டம் 1938 பாலிசிதார் மற்றும் முகவர் நலனை பாதுகாக்க பல நல்ல விஷயங்களை உள்ளடக்கி இருந்தாலும், அது முழுமையானதாக இல்லை. முக்கியமாக காப்பீட்டுத் துறை தலைவர்கள் மற்றும் ஏக்சுவரிஸ் எனப்படும் கணக்காயர்கள் கிளப்பிய பல்வேறு ஆட்சேபனைகளே அதற்கு முக்கிய காரணம் எனலாம்.
       கணக்கீட்டு மேலாளர்கள் முகவரின் கமிஷன் தொகைக்கு வரம்பு வைக்க வேண்டும் என விரும்பினர். முதலாண்டு கமிஷனாக 25% மற்றும் 2½% மறுபடி கட்டப்படும் ப்ரீமியத்திற்கு என்று வரையரை கோரினார்கள். அதனால் காப்பீட்டுச் சட்டம் 1938 அமலாக்கப் பட்டவுடனே அவர்கள் ஒரு சங்கத்தினை 24. ஆகஸ்ட் 1940 உருவாக்கினார்கள்.  அவர்கள் அரசுக்கு முதலாக சமர்ப்பித்த தீர்மானமே முகவரின் கமிஷன் குறைப்பை பற்றித்தான் என்பதில் வியப்பேதும் இல்லை.
       காப்பீட்டுத் துறை அதிகாரிகளும் கணக்காயர்களும் அவர்களது நிலையினை அரசுக்கு உணர வைத்ததன் மூலம் ஒரு வரைவு நவம்பர் 1944ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. அதனை குறிப்பிட்ட குழுவிற்கு அளித்து காப்பீட்டுச் சட்டம் 1938, பிரிவு40ன் கீழ் முகவர் கமிஷன் தொகை முதலாண்டு 40%லிருந்து 25% எனவும் அடுத்த ரினியூவல் கமிஷன் 5%லிருந்து 2.5% குறைக்க பரிந்துரையும், சட்ட திருத்தத்தை செய்யவும் கேட்டுக் கொண்டது.
       ஒருமுறை 25 ஜனவரி 1945ல் காலம் சென்ற திரு S.S.அலி அவர்கள் தலைமையில் கல்கத்தா முகவர்கள் ஒரு கூட்டத்தை கூட்டினர். அக்கூட்டத்தில் லைப் அண்டர்ரைட்டர் அசோஷியேஷன் ஆப் இந்தியா (Life underwriter association of India) என்ற அமைப்பு ஏற்படுத்தப் பட்டது.  அதன்பிறகு 31 ஜனவரி அன்று ஒரு பொதுக்கூட்டம் பெங்கால் நேஷனல் சேம்பர் ஆப் காமர்ஸ் என்ற கட்டிடத்தில் நடைபெற்றது. அதில் மேற்கூறிய சட்டதிருத்தத்தை எதிர்த்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  பிப்ரவரி 2 அன்று 10 திரு S.S.அலி தலைமையில் 10 பேர் குழு , மத்திய சட்டக் குழு உறுப்பினர்களை சந்தித்தது.  22 மார்ச் 1945 அன்று ஒருங்கிணைந்த தீர்மானம் ஒன்றினை மத்திய சட்டக்குழு அதிகாரிகள் அனைவருக்கும் அளித்தது.
       முகவர்களின் நலனை பாதுகாக்க பலதரப்பட்ட முயற்சிகளை காப்பீட்டுச் சட்டம் 1938ன் படி மேற்கொள்ளப் பட்டாலும், துறை அதிகாரிகள் மற்றும் கணக்காயர்களின் அழுத்தம் காரணமாக அரசு முதலாண்டு கமிஷன் வரம்பினை 40%லிருந்து 35%ஆக குறைத்தது  ஆனால் ரினியூவல் கமிஷன் தொகையினை 2.5%மாக குறைக்க முடியவில்லை. எனினும், முகவர் இல்லாத பாலிசி புதுப்பித்தலுக்கான கமிஷன் தொகையினை 5%லிருந்து 2.5% மாகக் குறைத்தனர்.
       இப்படி லைப் அண்டர்ரைட்டர் அசோஷியேஷன் ஆப் இந்தியா என்ற சங்கம் போராட்டத்தின் மூலம் முகவர்களுக்கான சேதாரத்தினை நினைத்ததை விட பெருமளவில் தவிர்த்தனர்.
சுதந்திரத்திற்கு பிறகு, மீண்டும் ஒரு முறை காப்பீட்டுச் சட்டம் 1938 திருத்தி வரைவு ஒன்று அறிமுகப் படுத்தப் பட்டது.  இவ்வரைவு முகவர் கமிஷன் மட்டுமல்லாது, தலைமுறை ரினியூவல் கமிஷனைப் பற்றியும் வரையறுத்தது.  மீண்டும் லைப் அண்டர்ரைட்டர் அசோஷியேஷன் ஒரு கூட்டம் போட்டு மே 1949 அன்று திரு K.C. நியோதி, பொருளாதாரத் துறை மெம்பரை சந்தித்து மனு ஒன்றை அளித்தது.  இம்முறை சங்கம், ப்ரொவின்ஷியல் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் பார்லிமெண்ட் உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றது 18, & 19,டிசம்பர் 1949ல் குறிப்பிட்ட குழு அமைக்கப் பட்டதும், அவர்களின் முன் தங்களது சாட்சியத்தை அளித்தது.தொடர்ந்த வற்புறுத்தலின் பேரிலும், சங்கம் கொடுத்த அழுத்தத்தினாலும் தலைமுறை ரினியூவல் கமிஷனின் பேரில் சில பலன்களை பெற்றது. சட்ட திருத்தம் 1950ல் முக்கியமான சட்ட திருத்தம் பிரிவு 64 (1)ல் செய்யப் பட்டது.  இப்பிரிவு முகவர்  தேர்வினை உரிமம் கொடுப்பதற்கு முன்னர் நடத்த சேர்க்கப்பட்டது. மற்றொரும் ஒரு பிரிவு 31A, ம் சேர்க்கப்பட்டது. இப்பிரிவு காப்பீட்டு அலுவல தொழிலாளர்களுக்கு போனஸ், விற்பனை,மற்றும் ப்ரீமிய வருமான அளவினை பொறுத்து ஒரு தொகையினை தருவதை தடுக்க வகை செய்யப் பட்ட்து.  ஆனால் இதனை முழுமையாக நடைமுறை படுத்த முடியவில்லை.  ஏனெனில் ஆயுள் காப்பீட்டு விற்பனை தேசியமயமாக்கப் பட்டது.

இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு விற்பனை தேசியமயமாக்கல்:
       19 ஜனவரி 1956 மதிய வேளையில் இந்திய ஜனாதிபதி ஆயுள் காப்பீட்டு தேசியமயமாக்கலை (லைப் இன்சூரன்ஸ் (எமர்ஜென்சி ப்ரொவிஷன்ஸ்) ஆர்டினன்ஸ் 1956, அறிவித்தார்.  இது இந்திய ஆயுள் காப்பீட்டு வணிகத்தையும், அயல்நாட்டினர் இந்தியாவில் மேற்கொண்டிருந்த ஆயுள் காப்பீட்டு வணிகத்தையும், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம்  வெளிநாட்டில் செய்யும் வணிகத்தையும் அரசுமயமாக்கலைப் பற்றி கூறியது. பாராளுமன்றத்தில் 17 பிப்ரவரி 1956ல் இந்த சட்டத்தினை அறிமுகப் படுத்தி நிதி அமைச்சர் திரு. C.D. தேஷ்முக் கூறும் போது, “இத்துறை எதிர்பார்த்ததைப் போல் தனது பங்கினை ஆற்றவில்லை. இத்துறையினை முன்னேற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகள், சட்ட திருத்தங்கள் ஆகியவையும் எதிர்பார்த்த வெற்றியினை அளிக்கவில்லை.  ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் அறக்கட்டளையாக மட்டுமே இயங்க வேண்டும் என்ற விதியினை மீறுகின்றன.  அறக்கட்டளை பணம் மற்றும் பங்குதாரர் பணத்தினை கையாளும் விதம் குறித்த தெளிவான பார்வை இல்லை” என்றார். மேலும் களப்பணி முகவர்கள் முக்கால்வாசி சதவிகிதத்தினர் போலி மற்றும் அவர்களது முக்கிய குறிக்கோள் சட்டத்திற்கு புறம்பாக தள்ளுபடி தரபயன்படும் வழிப்பாதையாகவே இருந்து வந்துள்ளனர்.
       நவம்பர் 1960ல், பாராளுமன்ற அளவீட்டுக் கமிட்டி திரு. H.C. தாசப்பா அவர்களின் முன்னிலையில் லைப் அண்டர்ரைட்டர் அசோஷியேஷன் சங்க உறுப்பினர்களை அழைத்து தன் தரப்பு வாதங்களை எடுத்து வைக்குமாறு கேட்டது.  திரு S.S. அலி, திரு. S.P.ஹஸ்ராவுடனும், திரு.A.K. புர்கயஸ்தாவுடனும் கமிட்டியின் முன்னர் வந்தனர்.  அதே சமயத்தில் திரு K.G. ராவ், லைப் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் தலைவர், சென்னை, திரு. G..L. திங்கரா, புது தில்லி, திரு.A. சுப்பையா, சென்னை, திரு.M.M. அஹூஜா, தில்லி ஆகியவர்களும் கமிட்டிக்கு வந்திருந்தனர்.  அவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் பரிச்சயப்படுத்திக் கொண்டனர். தாசப்பா கமிட்டி போலி முகவாண்மைகளை கண்டுபிடிக்கத் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்குமாறும், எல்.ஐ.சி முன்னேறத் தேவையான ஆலோசனைகளையும் கொடுத்தது.

லைப் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்களின் பெடரேஷன் ஆப் இந்தியாவின் உருவாக்கம்:
       திரு. தேவ். S. முத்பித்ரி, மும்பையின் முன்னணி முகவர் (சன்லைப் இன்சூரன்ஸ்) ஒரு அனைத்திந்திய அமைப்பினை உருவாக்க முயன்று கொண்டிருந்தார்.  ஆயுள் காப்பீட்டினை தேசிய மயமாக்கப்பட்டதிலிருந்தே இம்முயற்சினை அவர் செய்து கொண்டிருந்தார்.  திரு. S.S. அலியுடன் இது குறித்து அவர் பேச்சுவார்த்தையினையும் நட்த்தினார்.  ஆனால் திரு. S.S. அலி அவர்கள் பிப்ரவரி 1963ல் இறந்து விட்டதால், இவரின் முயற்சி பலிக்கவில்லை.அதனை தொடர்ந்து அவருக்கு பரிச்சயமான 17 சங்கங்களை அவர் தொடர்பு கொண்டார்.  நிறைய சங்கங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தன.  24 ஏப்ரல் 1962 அன்று பாம்பே கிளை 911ல் ஒரு கூட்ட்த்தை ஏற்பாடு செய்தார்.  அதில் இந்தியாவிலிருந்து பல்வேறு சங்கங்களை சார்ந்த நிறைய முகவர்களும் கலந்து கொண்டனர்.  ஒரு கமிட்டியை உருவாக்கினர்.  திரு.முத்பித்ரி தலைவராகவும், திரு. H.V. பாசுதேவ் அவர்கள் செயலாளராகவும், மற்றும் K.G. ராவ், L.B.கொடாக், S.P. ஹஸ்ரா, P.V. விர்கார், A.K. புர்கயஸ்தா, S.C. சகா, H.D. திங்கரா மற்றும் பலரும் கமிட்டி உறுப்பினர்களாயினர்.  இரண்டு விதமான கூட்டங்கள், ஒன்று ஜூலையில் கல்கத்தாவிலும், மற்றொன்று 1964 செப்டம்பரில் பாம்பேயிலும் நடத்தப்பட்டது.  அனைத்திந்திய மாநாட்டு செப்டம்பர 30, அக்டோபர் 1 மற்றும் 2ம் தேதிகளில் C.J. ஹால், பாம்பேயில் நடைபெற்றது.  60 முகவர் சங்கத்தினை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட முகவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் பெடரேஷன் உருவாக்கம் பெற்றது.  முகவர்களின் கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டு, அதனை எல்.ஐ.சி நிர்வாகத்தினரிடம் அளித்தனர்.  நிர்வாகமும் மனுவில் உள்ள அனைத்திற்கும், முக்கியமாக நிர்வாக சம்பந்தப் பட்ட விபரங்களுக்கு விரிவான பதில் அளித்தனர். 
       பெடரேஷன் தலைமையகமாக அக்டோபர் 1964 முதல் ஜனவரி 1967 வரை இரண்டாண்டுகள் பாம்பே இருந்தது.  இந்த காலகட்டத்தில்  அக்டோபர் 1965 முதல் “இன்சூரன்ஸ் இந்தியா” என்ற மாதாந்திர இதழை கொண்டுவந்தது.  ஆனால் அது ஆறு மாதங்களே வெளிவந்தது.  இந்த இதழ் பல தகவல்களை கொண்டதாகவும், மிக பிரபலமாகவும் இருந்தது.  ஜனவரி 1967ல் விஜயவாடாவில் முதல் அகில இந்திய கவுன்சில் கூட்டம் நடைபெற்ற பிறகு தலைமையகத்தை சென்னைக்கு மாற்றப் பட்டது.  தலைமையகத்தை மாற்றியதால் “இன்சூரன்ஸ் இந்தியா” மாத இதழ் வெளிவருவது நின்று விட்டது.
       இந்த குறுகிய காலக்கட்டத்திலேயே பெடரேஷன் எல்.ஐ.சி நிர்வாகத்தினராலும், அரசாலும் அங்கீகரிக்கப்பட்டது.  தலைமையகம் பாம்பேயிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட பிறகும், மூன்று மாதங்களுக்கு மாதாந்திர இதழ் வெளிவந்து அதன்பிறகே நிறுத்தப் பட்டது.  சென்னையை தலைமையகமாக மாற்றிய பிறகு அரசின் இரண்டு கமிட்டியிடமிருந்து அழைப்பு வந்தது.  அவை நிர்வாக புனரமைப்பு கமிட்டி மற்றும் மொராக்கா கமிட்டி.  திரு. A.K. புர்கயஸ்தா மற்றும் இதர உறுப்பினர்களுடன் பெடரேஷன், இவ்விரு கமிட்டியின் முன் வந்து தங்களது கோரிக்கைகளை சமர்ப்பித்தனர்.
       ஆனால் சென்னை நண்பர்களும் இரண்டாண்டுக்கு பிறகு பெடரேஷனை தொடர்ந்து நடத்த முடியவில்லை.  ஆகையால் இரண்டாவது அகில இந்திய கவுன்சில் மாநாடு பாலக்கோல், ஆந்திராவில் நடைபெற்ற பிறகு தலைமையகம் கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது.
       தலைமையகம் கல்கத்தாவிற்கு மாற்றப்பட்ட பிறகு முகவர்ஒழுங்குமுறை விதிகளை வகுக்கஆற்றல் மிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. இது பெடரேஷனின் கோரிக்கைகளில் ஒன்று மற்றும் எல்.ஐ.சி ஊழியர் ஒழுங்கு முறை விதியினைப் போல் எல்.ஐ.சி சட்டம் 1956ன் படி, அத்தியாவசியமானதும் கூட.
       மத்திய அமைச்சர்கள், மற்றும் பார்லிமெண்ட் உறுப்பினர்களுடன் தொடர்ந்து பெடரேஷன் நடத்திய பேச்சுவார்த்தைகள், அழுத்தங்களினால் கடைசியாக எல்.ஐ.சி நிர்வாகம் முகவாண்மை ஒழுங்குமுறை விதிகளை குறித்து விவாதிக்க சம்மதித்தது.
       திரு T.A. பய் அவர்கள் எல்.ஐ.சியின் நிர்வாக அதிகாரியாக (chairman) பொறுப்பேற்று கொண்டது பெடரேஷனுக்கு ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பாக அமைந்தது. அவர் எல்.ஐ.சி. முகவர்களின் பிரச்சினைகளில் தீவர கவனம் செலுத்தினார். அதே சமயத்தில் அவர்களும் எல்.ஐ.சி. நிர்வாகத்தின் மேனேஜின் டைரக்டர்களான திரு.N.V. நாயுடு அவர்களும், திரு. M.V. சகோனி அவர்களும் 150மணி நேரம் பொறுப்பெடுத்து 42 பக்க முகவர் ஒழுங்கு முறை விதியைனை தயாரித்து 1970 ஜூலை எல்.ஐ.சி நிர்வாகத்திடம் சமர்ப்பித்த்து. பலசுற்று பேச்சுவார்த்தை, விவாதங்களுக்கு பிறகு, ஐந்தாவது வரைவினை அரசு அங்கீகரித்து ஒப்புதல் அளித்தது.  இந்த வரைவினை இறுதி செய்வதற்கு இரண்டு ஆண்டு காலம் எடுத்தது. மே 1, 1972 முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இவர்கள் எத்தனை முக்கியமானவர்கள் என்பதை சொல்லும் எந்த ஒரு
வாய்ப்பினையும் விட்டுவிடக் கூடாது.
.பெடரேஷன் சேர்க்க விரும்பிய பல முக்கிய ஷரத்துகளை நிர்வாகம் ஒப்புக் கொள்ள மறுத்து விட்டது.  நிறைய மாற்றங்கள் பெடரேஷனுக்கு தெரிந்தும் தெரியாமலும் செய்யப்பட்ட்து.  ஆனாலும் உலகத்திலேயே முதன்முதலாக அமல்படுத்தப் பட்ட விதத்தில் நன்மையே.இவ்வரைவில் நிறைய மாற்றங்களும் தேவைப்பட்டன.  எனினும் பெடரேஷன் இவ்வரைவின் விளைவுகளை கண்டு, பின்னர் தேவையான மாற்றங்களை சொல்ல, செய்ய காத்திருப்பதாக ஒத்துக் கொண்டது.  இப்பொழுது அதற்குரிய சமயம் வாய்த்துள்ளது எனினும் எல்.ஐ.சி நிர்வாகமும், அரசும் மௌனத்தையே சாதிக்கின்றன.
        “நிர்வாகத்திற்கு எதிராக அல்லது தீமை பயக்கக் கூடிய” என்ற சொற்றொடருக்கு இதுவரை ஒரு தெளிவான விளக்கம் தரப்படவில்லை. காப்பீட்டு முகவர் சட்டத்தின் மேற்கூறிய பிரிவுக்கு ஏமாற்றுதல் என்பது அர்த்தமா? இது குறித்து எல்.ஐ.சி ஒரு தெளிவான விளக்கத்தினை சொல்ல வேண்டும்.
       தக்க வாய்ப்புகள் என்பதற்கான விளக்கமும் முகவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நிறைய முகவர்கள் தவறாக புரிந்து கொள்ளப் படுகிறார்கள், மற்றும் நீக்கப் படுகிறார்கள். அவர்களது புதுப்பித்தல் கமிஷன் அவர்களை சென்று சேர்வதில்லை. ஏனெனில் விதிமுறைகளும், சட்டப் பிரிவுகளும் தெளிவாக இல்லை.  இதற்காக சட்ட நிபுணர்களையும், பழைய தீர்ப்புகளையும் ஆலோசிக்க வேண்டியுள்ளது.
       முகவர்கள் ஒழுங்குமுறை விதிகளை பற்றி விவாதிக்கும் போது முகவர் மன்ற விதிகளை உருவாக்கவும் இரு மேனேஜிங் டைரக்டர்களும் அதிக முக்கியத்துவம் அளித்தனர்.  திரு. S.V. சகோனி அவர்கள் மன்ற விதிகளை ஏப்ரல் 1, 1971 முதல் அமல்படுத்த விரும்பினார்.  மன்ற முகவர் விதிகள் பெடரேஷனுக்கு தெரியாமலே ஒப்புக்கொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தப் பட்டது.  மேலும் முகவர் மன்ற விதிமுறைகளின் அடிப்படை விஷயங்களையே சேதப்படுத்தியது.
       முகவர் ஒழுங்கு முறை விதிகளை நிர்ணயிப்பதில் பெடரேஷனின் முயற்சி வெற்றி பெற்றாலும், அது எல்.ஐ.சி நிர்வாகத்தினை தொடர்ந்த பேச்சுவார்த்தைகளுக்கு வலியுறுத்தி கொண்டே இருந்தது. முகவர்கள், மற்றும் நிர்வாகத்தின் எல்லா மட்டத்திலும் இப்பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும் என்பது பெடரேஷனின் குறிக்கோளாக இருந்தது. 1975லிருந்து எல்.ஐ.சி. மேல்மட்ட நிர்வாக அதிகாரிகளுடன் தொடர்ந்த விவாதக் கூட்டம் நடைபெற்று வந்தாலும், மண்டல அளவிலோ அல்லது கோட்ட அளவிலோ இது போன்ற கூட்டங்களை பெடரேஷன் நடத்த முடியவில்லை.
       பெடரேஷனால் நிறைய முயற்சிகள் எடுக்கப் பட்டும், அதன் குறிக்கோள் நியாயமானதாக இருந்தாலும், அதிகமாக சாதிக்க முடியவில்லை. இதற்கு முக்கியமாக பெடரேஷனின் கட்டமைப்பும், பண பற்றாக்குறையுமே முக்கிய காரணங்கள்.  ஆனாலும், பாலிசிதாரருக்கு சில பயன்களை கிடைக்க செய்தது. முக்கியமாக தாமதமாக கோரப்படும் இழப்பீடுகளுக்கு கூடுதல் வட்டி போன்ற சலுகைகளைக் குறிப்பிடலாம். மேலும் கடன் பாலிசிகளுக்கு வாங்கப் படும் ஸ்டாம்பு டியூட்டி மிக அதிகமாகவும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபட்டும் இருந்ததை கணிசமாக குறைத்தது. மற்றும் பாலிசிதாரர் சேவையினை ஒரு மையத்திலிருந்து கிளை அளவில் சேவையினை கொடுக்கவும் பெரு முயற்சி செய்து சாதித்தது.
       நான் தலைவராக செப்டம்பர் 1991ல் பெடரேஷன் பொறுப்பேற்ற கொண்ட பிறகு, நமது சங்கத்தின் உறுப்பினர்கள் கொடுத்த ஆதரவினால் முதல் வேலையாக செய்தது பெடரேஷனை பணப் பற்றாக்குறையிலிருந்து விடுவித்ததும், திடமாக்கியதும்தான். கூடவே, முகவர் கமிஷன் முறையாக முகவர்களுக்கு கிடைக்காமலிருந்தது. அதனை முறைப் படுத்தியும் கமிஷன் ஒரு குறிப்பிட்ட தேதியில் கிடைக்குமாறும் ஏற்பாடு செய்தேன்.  முகவர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்ளுக்கு, முக்கியமாக, முகவர் மன்ற உறுப்பினர்களுக்கான குழுக் காப்பீடு, கிராஜுவிட்டி தொகை அதிகப்படுத்துதல், பாலிசி பெய்டு அப் பாலிசியாக மாறும் காலவரையை 5 ஆண்டிலிருந்து 2 ஆண்டுகளாக குறைப்பது, முகவர் மருத்துக் காப்பீடு, முகவர்களுக்கான வட்டி இல்லா முன்பணம், மன்ற முகவர் விதிமுறைகளில் மாற்றங்கள் என்பதிலும் கவனம் செலுத்தினேன்.
       ஜுன் 9, 1993 அன்று மல்ஹோத்ரா கமிட்டியின் முன் ஆஜராகியதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறோம். தனியார்மயமாக்கலை ஒப்புக் கொண்டோம். அதற்கான நிபந்தனையாக எல்.ஐ.சியையும் அதன் சேவைகளையும் மேம்படுத்தவும், எல்.ஐ.சி அதன் போட்டியாளர்களுக்கு இணையாக ஈடு கொடுக்க வேண்டும், அதுவும், தனியார்மயமாவதற்கு முன்பு என்றோம்.
       நவம்பர் 13, 1995ல் திரு. கணேசன் கமிட்டி முன்பும் பாலிசி காலாவதியாவதின் காரணங்கள் குறித்து விவாதித்தோம். அதனை தவிர்ப்பதற்கான, குறைப்பதற்கான மாற்று வழிகளையும் சமர்ப்பித்தோம். அதன் பலனை நாம் இன்று அனுபவிக்கின்றோம்.  நிலைக் குழுவின் முன்பும் நிதி நிலைமை பற்றி திரு. சிவாஜி ராவ் பாட்டீல்- சேர்மேன் அவர்கள் தலைமையில், திரு. N. கஜபதி ராவ் - செயாலாளர், திரு. ரன்வீர் ஷர்மா-ஆக்ரா, திரு. ப்ரேம் சிங்கால் – தில்லி, திரு. சஞ்சய் சிங் – தில்லி, மற்றும் நான் சேர்ந்து சந்தித்தோம்.  வங்கிகளை இன்சூரன்ஸ் கார்பரேட் முகவர்களாக மாற்றுவதை கடுமையாக ஆட்சேபித்தோம்.
       நாங்கள் ஒரு கேள்வியினை முன்வைத்தோம். “வங்கிகள் ஏற்கனவே சில பொறுப்புகள், உதாரணமாக பொது மக்களின் பணபரிமாற்றம், நிதி நிரந்தர வைப்புத் திட்டங்கள் என்று செயல்படும் பொழுது, எதற்காக அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக காப்பீட்டு விற்பனையும் கொடுக்க வேண்டும்?
       சட்டப்பிரிவு 44 குறித்தும், சீனியர் முகவர் முறை குறித்தும் மற்றும் எழுத்து மூலமாக நாங்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.  திரு. முரளி மனோகர் ஜோஷி அவர்கள் தலைமையிலான நிதி நிலைக் குழு முன்பாகவும் 22.01.2010 அன்று கூடினோம்.  எங்களது குழுவில் நான், திரு N. கஜபதி ராவ், திரு. ப்ரேம் சிங்கால் மற்றும் திரு.அவதேஷ் குமார் தில்லியிலிருந்தும், திரு. ரன்வீர் ஷர்மா ஆக்ராவிலிருந்தும் இருந்தனர். கீழ்க்கண்ட விவரங்களை குறித்து விவாதித்தோம்.
1.        புது மர்ர்ட்டாலிட்டி அட்டவணை மற்றும் நிர்வாக செலவினங்களை குறைத்தல்
2.        ஐ.ஆர்.டி.ஏ ஆணையம் முகவர் உரிமக் கட்டணத்தை முகவர் தொழிலின் தரத்தை இந்தியாவில் உயர்த்திட உபயோகிக்க வேண்டும்.
3.        இன்சூரன்ஸ் சட்டத்தில் சில பிரிவுகள் விடுபட்டு போய்விட்டதை குறிப்பாக பிரிவு 44 குறித்து ஆட்சேபனை தெரிவித்தல்.
4.        பாலிசிதாரரின் நலனை கருத்தில் கொண்டு தொடர்ந்து நிறைய ஆலோசனைகளை தருகின்றோம்.  முக்கியமாக, நிர்வாக செலவுகளை கணிசமான அளவில் குறைப்பதன் மூலம் போனஸ் தொகையினை அதே அளவில் தக்க வைத்தல். காப்பீட்டுச் சட்டம் பிரிவு 40 (C), நிர்வாக செலவுகள் 85%க்குள் எல்.ஐ.சி வைத்துக் கொள்ள வேண்டும் என வரையறுத்துள்ளது. ஆனால் சூழ்நிலை பொறுத்தே உள்ளது. அதே போல், பாலிசி சரண்டர் தொகையினை மாற்றவும், பெய்ட் அப் பாலிசி காலத்தை 3 ஆண்டுகளிலிருந்து 2 ஆண்டுகளாக குறைக்கவும் வேண்டுகிறோம். பாராளுமன்ற திட்ட மதிப்பீட்டுக்குழு 1960-61லேயே எல்.ஐ.சியின் சரண்டர் தொகை மற்ற கம்பெனிகளை காட்டிலும் குறைவாக உள்ளது என்பதை கண்டறிந்துள்ளது. முகவர்களின் கமிஷன் தொகையினை குறைப்பதை விடுத்து, முகவர்களின் நலனுக்காக ஓய்வூதியம் அளிப்பது, கிராஜுவிட்டி தொகையினை அதிகரிப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை விடுத்து, நவீனமயமாக்குகிறோம், விரிவாக்கம் செய்கிறோம் என்று செலவுகளை அதிகப்படுத்தக் கூடாது.
மறக்க முடியாத நிகழ்வுகளும், புதிய வரலாறும்
1.        மலேசியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் ஆயுள் காப்பீட்டு லியாபியின் தலைவர் என்ற முறையில் கலந்து கொண்டேன். முதன் முறையாக 20 வெளி நாடுகளில் உள்ள சங்கங்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
சேவை வரி;
       2001ல் எல்.ஐ.சி முகவர் கமிஷனிலிருந்து சேவை வரியினை கழித்துக் கொள்ள முடிவெடுத்த்து. ஆனால் நாங்கள் தலையிட்ட்தாலும், தொடர்ந்து வலியுறுத்தியதாலும் எல்.ஐ.சி நிர்வாகமே முகவர் கமிஷனுக்கான சேவை வரியினை செலுத்த ஒப்புக் கொண்டது. இது சட்டப்படியானதும், சரியானதும் கூட.
ப்ரீமியத் தொகைக்கான சேவை வரி:
       திரு. N. கஜபதி ராவ், காலம் சென்ற திரு. சுரேஷ் சராஃப், திரு. P.P. சிங், திரு, ரன்வீர் சர்மா, திரு. பிரேம் சிங்கால் மற்றும் நான் சார்ந்த குழுவின் சிபாரிசினாலும், தொடர் முயற்சியினாலும் எல்.ஐ.சி. ரிஸ்க் ப்ரீமியத் தொகைக்கான சேவை வரியினை பாலிசிதாரர் சார்பில் ஒப்புக் கொண்டது.
       ஆனால் தற்போது 01.01.2014 முதல் சேவை வரி மொத்த ப்ரீமியத்திற்கும் செலுத்தப் பட வேண்டும் என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை கடுமையாக எதிர்க்கின்றோம்.
       ஆயுள் காப்பீட்டு வணிகம் கணிசமாக குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம். ப்ரீமியத்திற்கான சேவை வரியினை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையின் முக்கிய அங்கம்.
பொன்விழா ஆண்டு பரிசு:
       பொன்விழா ஆண்டு பரிசான தங்க காசினை சங்கத்தின் தொடர் வலியுறுத்தலால், மன்ற உறுப்பினர் முகவர்களுக்கு கிடைக்கும்படி செய்தோம்.

லியாபி சங்கத்தின் வரலாற்றினையும், நிகழ்வுகளையும் கூறியதன் மூலம், நாம் இனி முகவர் நலனுக்காகவும், பாலிசிதாரர் நலனுக்காகவும் எடுத்து செல்ல வேண்டிய நிகழ்வுகள் குறித்து பார்ப்போம்.
       2005 முதல் 2013 வரை நான் கவுரவக் குழுவில் இருந்தேன்.  முகவர்களுக்கான இழப்பீடு வழங்கும் குழுவில் உறுப்பினராகவும், புது பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்தேன். ஸ்வரூப் கமிட்டியை உங்கள் ஒத்துழைப்புடன் முடிவுக்கு கொண்டு வந்தோம்.
       இதெல்லாம் பழைய கதை. ஆனால் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் முகவர் சமுதாயத்தை காப்பாற்ற வகுக்க வேண்டிய வழிகளையும், செயல் படுத்த வேண்டிய முறைகளையும் பார்ப்போம்.
1.        ஆன்லைன் வணிகத்தை முற்றிலும் எதிர்ப்போம். அது காப்பீட்டுச் சட்டம் 1938த்திற்கு முற்றிலும் புறம்பானது.
2.        நேரடி விற்பனை, வங்கிகளின் மூலமும், கார்பரேட் கம்பெனி மற்ற சேனல்கள் மூலம் காப்பீடு விற்பனையை கண்காணிக்க வேண்டும்.
3.        போனஸ் தொகையை பாலிசிதாரர்களுக்கு அதிகப் படுத்திக் கொடுக்க வேண்டும்.
4.        பாலிசிதாரர் பாதுகாப்பு சட்டம் 2000 மீறப்படுவதை தடுக்க வேண்டும்.
5.        பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
6.        அயல்நாட்டு முதலீடுகளை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், சிறிய பாலிசிதாரர் நலனை காக்கவும் செலவிட வேண்டும்.
7.        அதிக பணம் செலுத்தும் நபருக்கான பங்கினை தரவேண்டும்.
8.        காப்பீடு உரிம கட்டணத்தை முகவர் நல வாரியம் உருவாக்க பயன் படுத்த வேண்டும்.
9.        முகவர் ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள ஏமாற்று, மற்றும் நிறுவன விதிமுறைகளுக்கெதிரான என்பதற்கான விரிவான விளக்கத்தை தர வேண்டும்.
10.     கமிஷன் மீதான வரைமுறை மற்றும் மாறுதல்களுக்கு நம்மை தயார் செய்து கொள்ளுதல்.
இது தவிர நமது தொடர் கோரிக்கைகளான கிராஜுவிட்டி, ப்ரீமியம் வாங்கி கட்டுவதற்கான தரகுத் தொகை, மற்றும் அதிக அதிகாரங்கள் மன்ற முகவர்களுக்கு.
       முதலீட்டு உச்ச வரம்பினை ஐ.ஆர்.டி.ஏ ஆணையம் பிப்ரவி 2013 முதல் 10%லிருந்து 15%ஆக உயர்த்த சம்மதித்துள்ளது. தனியார் காப்பீட்டு நிறுவனங்களுடன் போட்டியிட எல்.ஐ.சிக்கு இது உதவியாக உள்ளது. காப்பீட்டு சட்டம் 1938 மற்றும் காப்பீட்டு சட்டம் 1998 ஆகியவற்றை திருத்த சட்ட பூர்வமாக இது உதவுகின்றது.
       புதிய சவால்களை முகவர் சமுதாயம் இப்பொழுது சந்தித்து வருகின்றது. காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் காப்பீட்டு நிறுவனங்களை காக்கவும், கறுப்பு பணத்தை ஒழிக்கவும், தீவிரவாத பணம் உள்ளே வருவதை தடுக்கவும், கடினமான விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றது.
       2004ல் ரூ.403 கோடி அரசுக்கு வருவாய் கொடுத்த நிர்வாகம் ரூ.1049 கோடியாக 2013ல் உயர்ந்தது.   ஆனால் பாலிசிதார்ரின் போனஸ் தொகை குறைவாகவும், அரசின் பங்கு அதிகமாகவுமே உள்ளது. அயல்நாட்டு முதலீடு தேவையா? தேவையெனில் அது கட்டமைப்புகளை மேம்படுத்த உபயோகப் படுத்தப் படுமா? பாலிசிதார்ரின் தேவைகளை பூர்த்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
       பொதுமக்களின் கேள்விகளான காப்பீட்டு விதிமுறைகள் மீறப்படுகிறதா? அவர்களின் நலன்கள் பாதுகாக்க படுகிறதா? எங்களது தொடர்ந்த ஆலோசனைகள் புறக்கணிக்கப் பட்டு புது பாலிசிகள் உருவாக்கப் படுகிறது என்பதற்கான விடைகளை எதிர்பார்க்கின்றோம்.
       என்.ஜி.ஓ எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை கொண்ட குறிப்பிட்ட சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு  மைக்ரோ காப்பீடு கொடுக்கப்படுகின்றது. நிறைய நிறைய இடைத் தரகர்கள் உருவாக்கப் படுகின்றனர். அதன்மூலம் முகவர் கட்டமைப்பு சிதைக்கப் படுகின்றது.  கார்ப்பரேஷனின் குறுகிய செயல் திட்டத்தினால் கேரியர் முகவர்கள், மன்ற உறுப்பினர் முகவர்கள், உலக அளவிலான MDRT, COT,TOT ஆகியோரின் நிலை என்ன?
       பத்திரிக்கை ஒன்று முகவரின் கமிஷன் வரைமுறையினை கண்காணிக்க ஒரு குழுவினை நிதி வரைமுறை கமிட்டி அமைத்துள்ளதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. லியாபியிலிருந்து நாங்களும் அவர்களுடன் தொடர்பு கொண்டு எங்களது ஆலோசனைகளையும், தேவைகளையும் தெரிவிக்க உள்ளோம்.
       நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பிய சில தகவல்கள் இவை.

ஒவ்வொரு தகவலை விரிவாக அலசவும், செயலாளர் அறிக்கையின் மீது விவாதித்து எந்த விதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை குறித்தும் தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
       நான் எனது உரையை முடிப்பதற்கு முன்னர் உங்கள் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். எனது குரு காலம் சென்ற திரு. புர்கியஸ்தா அவர்கள் 17 நவம்பர் 1995 அன்று ஆசிர்வதித்து கூறிய வார்த்தைகள் இவை:நீ பெடரேஷனுக்கு எனது அன்பான கவனிப்பில் நம்பிக்கைக்கு உரியவனாகவும், பழமையானவனாகவும் சேவை செய்து வருகிறாய். பிரச்சினையின் ஆணிவேர் வரை ஊடுருவி,அதனையொட்டி பயணிக்கிறாய். மற்ற எவரையும் விட இப்பெடரேஷனில் உனது அர்ப்பணிப்பு மகிழ்ச்சி அடைய செய்கிறது. நீ செய்த சேவைகள் எனது நினைவலைகளிலும், ஆவணங்களாகவும் என்றென்றும் இடம் பெற்றுள்ளது எப்பேர்ப்பட்ட வார்த்தைகள்.

நன்றிகளுடன்,

ஹெ.எம். ஜெயின்.

ALL INDIA PRESIDENT,LIAFI

      
      
posted by: S. NATARAJAN,SECRETARY,
LIAFI,COIMBATORE DIVISION,SOUTHERN ZONE. ON 03/11/2014
       

No comments:

Post a Comment