வாழ்கையின்
20 கோட்பாடுகள்
* எந்த விசயமாக
இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகாகையாளுங்கள்.
* அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும்
பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
* தானே
பெரியவன், தானே சிறந்தவன்
என்ற அகந்தையை விடுங்கள்.
* விட்டுக்
கொடுங்கள்.
* சில
நேரங்களில், சில சங்கடங்களை
சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
* நீங்கள் சொன்னதே
சரி, செய்வதே சரி
என்று கடைசி வரை வாதாடாதிர்கள்.
* குறுகிய
மனப்பான்மையை விட்டடொளியுங்கள்.
* உண்மை
எது, பொய் எது என்று
விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும், அங்கே கேட்டதை
இங்கும் சொல்வதை விடுங்கள்.
* மற்றவர்களை விட
உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதிர்கள்.
* அளவுக்கதிகமாய்
தேவைக்கதிகமாய் ஆசைப்படாதிர்கள்.
* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும்,
அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ,
சொல்லி கொண்டிருக்காதிர்கள்.
* கேள்விபடுகிற
எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.
* உங்கள்
கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
* மற்றவர்களுக்கு
உரிய மரியாதையை காட்டவும், இனிய இதமான
சொற்களை பயன்படுத்தவும் மறக்காதீர்கள்.
* புன்முறுவல்
காட்டவும்,சிற்சில அன்பு
சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதிர்கள்.
* பேச்சிலும், நடத்தையிலும், திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும்
பண்பாட்டையும் காட்டுங்கள்.
* அவ்வப்போது
நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
* பிணக்கு
ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே
பேச்சை துவக்க முன்வாருங்கள்.
* தேவையான
இடங்களில் நன்றியும், பாராட்டையும்
சொல்ல மறவாதிர்கள்.
நன்றி
LIAFI-COIMBATORE DIVISION
|
Sunday, 4 November 2012
வாழ்கையின் 20 கோட்பாடுகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment