வங்கி மூலம் 5 சதவீத பாலிசி விற்பனை: எல்.ஐ.சி.,
தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியில் சுமார் 5 சதவீத பாலிசி வர்த்தகத்தை வங்கிகள் மூலம் செயல்படுத்த எல்.ஐ.சி., முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு எல்.ஐ.சி., நிறுவனம் பிரீமியம் தொகையாக ரூ. 2,03,388 கோடி வசூல் செய்துள்ளது.
இதில் வங்கிகள் மூலம் பெறப்பட்ட தொகை ரூ. 1281 கோடியாகும். இது 0.60 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதை 5 சதவீதமாக அதிகரிக்க எல்.ஐ.சி., முயற்சித்து வருவதாகவும், ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என எல்.ஐ.சி.,யின் செயல் இயக்குநர் விபின் ஆனந்த் தெரிவித்தார்.
எல்.ஐ.சி., நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் சுமார் 7 லட்சம் புதிய பாலிசிகளை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment